முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / SSC Tentatvie Calendar: 2023ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு

SSC Tentatvie Calendar: 2023ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு

SSC பணியாளர் தேர்வு வாரியம்

SSC பணியாளர் தேர்வு வாரியம்

SSC Tentatvie Calendar: வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

2023ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2022):

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, 2022 (நிலை -1) அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக அக்டோபர்  1ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு நடைபெறும் மாதம் 2022 டிசம்பர்.

ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) 2022 - Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I) 2022:     

ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) 2022 அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக டிசம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு நடைபெறும் மாதம் 2023 ஜனவரி- பிப்ரவரி .

இளநிலை பொறியாளர் (முதல் தாள்) தேர்வு (Junior Engineer (Paper-I) Examination, 2022): 

இளநிலை பொறியாளர் (முதல் தாள்) 2022  அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக செப்டம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு நடைபெறும் மாதம் 2022 நவம்பர்.

பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு 2022 (Multi Tasking non technical staff): 

பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு 2022  அறிவிப்பு 2023 ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக பிப்ரவரி 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். 2023 ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வு நடைபெறும்.

இதையும் வாசிக்கஅடுத்த 6 மாதத்துக்குள் 42,000 பேருக்கு பணி - வேலைவாய்ப்பு குறித்து எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு

காவலர் நிலை பணி (Constable (GD) in CAPF & Assam Rifle):  

மத்திய ஆயுதக் காவல்படை (சி ஏ பி எஃப்) மற்றும் அசாம் ரைபிள் ஆகியவற்றில் காவலர் நிலையில் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி வெளியிடப்படும். 2023 ஜனவரி 19ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 2023 மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடைபெறும்.

சார் - ஆய்வாளர் பணி (Sub-Inspector in Delhi Police, Central Armed Police Force Exam): 

டெல்லி காவல் துறை, சிஏபிஎஃப்-களில் சார் - ஆய்வாளர் 2022 பணியிடங்களுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் 30ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 2022 நவம்பர்  மாதம் தேர்வு நடைபெறும்.

இதையும் வாசிக்கEducation Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன

சுருக்கெழுத்தாளர் நிலை சி & டி தேர்வு 2022 (முதல் நிலை) Stenographer Grade ‘C’ &‘D’ Examination, 2020 (Tier-1) : 2022 சுருக்கெழுத்தாளர் சி & டி நிலைத் தேர்வு பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வெளியிடப்படும். செப்டமபர் 5ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 2022 நவம்பர்  மாதம் தேர்வு நடைபெறும்.

First published:

Tags: Jobs, SSC