முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / SSC Tier 1 Exam: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்வு வரும் 24ம் தேதி தொடங்குகிறது

SSC Tier 1 Exam: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்வு வரும் 24ம் தேதி தொடங்குகிறது

மாதிரி படம்

மாதிரி படம்

SSC Exam 2022: தென்மண்டலத்தில் இத்தேர்வு 24.05.2022 முதல் 27.05.2022 வரையிலும், 30.05.2022 முதல் 03.06.2022 மற்றும் 06.06.2022 முதல் 10.06.2022 வரையிலும் மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

SSC 2021 combined higher secondary level tier 1 Examination: தென்மண்டலத்தில்,  2021 ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு (நிலை-1) கணினி அடிப்படையில் நடக்கவுள்ளது.

பணியாளர் தேர்வாணயத்தின் தென்மண்டல துணை இயக்குநர் இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

" தென்மண்டலத்தில் 2,94,445 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி & வேலூரிலும், ஆந்திரப்பிரதேசத்தில் திருப்பதி, நெல்லூர், கர்நூல், சிராலா, குண்டூர், காக்கிநாடா, ராஜமுந்திரி, விஜயவாடா, விசாகப்பட்டினம் & வைசியநகரம் மற்றும் தெலங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர் & வாரங்கல் ஆகிய இருபது நகரங்களில் உள்ள 23 மையங்களில் நடைபெற உள்ளது.

தென்மண்டலத்தில் இத்தேர்வு 24.05.2022 முதல் 27.05.2022 வரையிலும், 30.05.2022 முதல் 03.06.2022 மற்றும் 06.06.2022 முதல் 10.06.2022 வரையிலும் மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் - முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 10 மணி வரை, 2-வது ஷிப்டு பிற்பகல் 12.30 மணி முதல் 01.30 மணி வரையிலும் 3-வது ஷிப்டு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பாக இருந்தும், அதன் பிறகு அவர்களது தேர்வு நாள் வரை மட்டும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளத்தக்க வகையில், தேர்வாணையம் வலைதளத்தில் மின்னணு – தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டுக்காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா / பட்டன் ஹோல் / ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் எடுத்து வர முற்றிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. அது போன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன் சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்து வரும் 3 – 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் எதையும்தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு- டவுன்லோட் செய்யும் வழி இதோ

மின்னணு தேர்வு கூட அனுமதிச் சீட்டு மற்றும் அசல் அடையாள ஆவணமின்றி வரும் விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வுக்கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் தென்மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (லேண்ட் லைன்- 044 – 2825 1139 & செல்போன்: 94451 95946)உதவி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கு மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வு தேதியில் மாற்றமில்லை

கொரோனா நோய்த் தொற்றை கருத்தில்கொண்டு பணியாளர் தேர்வாணையம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன், விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கூட மின்னணு அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ளபடி அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி, தேர்வை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: SSC