• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ரூ.85,000/- சம்பளம் ... SSB ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ரூ.85,000/- சம்பளம் ... SSB ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

SSB ஆணையத்தில் வேலைவாய்ப்பு

SSB ஆணையத்தில் வேலைவாய்ப்பு

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.10.2021 அன்று வரை நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

  • Share this:
    எஸ்.எஸ்.பி. (Sashastra Seema Bal) என்பது இந்திய-நேப்பாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் (263.கி.மீ), உத்திரப் பிரதேசம் (599.3 கி.மீ), பீகார் (800.4 கி.மீ), மேற்கு வங்காளம் (105.6 கி.மீ) மற்றும் சிக்கிம் (32 கி.மீ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய - நேப்பாள எல்லைகளான 1751 கி.மீ தூரத்தை பாதுகாக்கிறது.

    சிக்கிம் (32 கி.மீ), மேற்கு வங்காளம் (183 கி.மீ), அசாம் (267 கி.மீ) மற்றும் அருணாச்சல் பிரதேசம் (217 கி.மீ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது.

    தற்போது எஸ்.எஸ்.பி. ஆயுத காவல் படையில் 51 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மத்திய அல்லது மாநில அரசு கல்வித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Post Graduate Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.10.2021 அன்று வரை நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் SSB
    வேலையின் பெயர் Specialist & General Duty Medical Officer (GDMO)
    காலிப்பணி இடங்கள் 51 காலிப்பணி இடங்கள்











    Specialist 07 காலியிடங்கள்
    GDMO 44 காலியிடங்கள்

    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் (Interview )
    Interview தேதி 26.10.2021 அன்று வரை
    கல்வி தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Post Graduate Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை
    விண்ணப்ப முறை விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.10.2021 அன்று வரை நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.ssbrectt.gov.in/docs/GDMO.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: