ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்... மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை...

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்... மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை...

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்

விண்ணப்பப் படிவத்தில் விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், கேட்கப்பட்ட சான்றுகள் இணைக்கப்படாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli |

  காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூர்வை ஆகிய பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை அறிவிப்பை அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

  அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்

  இந்து மதத்தைச் சார்ந்த 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பொது நிபந்தனைகள்:

  தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இறை இருத்தல் வேண்டும்.

  01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

  இணைக்கப்படும் சான்றுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copies only ) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

  திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை https://srirangamranganathar.hrce.tn.gov.in மற்றும் www.srirangam.org என்ற வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

  பணியிடங்களின் எண்ணிக்கை பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

  விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

  விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளில் உண்மைதன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

  இதையும் வாசிக்க: இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

  17.10.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடனும் ஆஜராக வேண்டும்.

  எவ்வித காலதாமதமோ / காரணங்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறையில் வரிசை எண் மற்றும் உரிய சான்றுகளுடன், அஞ்சல் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு "இணை ஆணையர் / செயல் அலுவலர், அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006." என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

  மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும், அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

  விண்ணப்ப படிவத்தில் விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், கேட்கப்பட்ட சான்றுகள் இணைக்கப்படாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

  நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள். குற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள், ஜாமீனில் கட்டுப்படுத்தப்பட்டவர்கள், திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள். திருக்கோயில் குத்தகைதாரர்கள் மற்றும் வாடகைதாரர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள், தீர்ப்புக் கடனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

  தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும் மற்றைய பணிகளுக்கும் பணியிட மாறுதல் செய்யப்படுவார்.விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதி அளிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்கஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை... டிப்ளமோ படிப்பு போதும்...

  விண்ணப்பதாரர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டும், திருக்கோயிலில் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள். நடைமுறைகள் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினரால் அவ்வப்போது பிறப்பிக்கப்படுகின்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டும் பணிபுரிய கடமைப்பட்டவர் ஆவார்.

  தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்தும், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவர். 18 இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் தெரிந்து கொள்ளலாம்.

  இந்த பணி நியமன நடவடிக்கை அனைத்தும் அரசால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கும் அவ்வப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கும் நீதிமன்ற உத்ரவுகளுக்கும் கட்டுப்பட்டதாகும்.

  Srirangam Sri Ranganathaswamy Temple vacancy application

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment