Home /News /employment /

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் வேலை

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் வேலை

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப விண்ணப்பிக்க வேண்டும்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் , ஸ்ரீ ரங்கம் வட்டம் , ஸ்ரீ ரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்படும் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பணி நியமனம் செய்ய 13.01.2022 மாலை 05 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப விண்ணப்பிக்க வேண்டும். இணை ஆணையர் / செயல் அலுவலர் , அருள் மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் , ஸ்ரீ ரங்கம் , திருச்சிராப்பள்ளி 620006. விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangam.org/ என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பணியிட விபரங்களுக்கான கல்வித் தகுதி , வயது வரம்பு , நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    ஆகம ஆசிரியர் பணியிடத்திற்கான தகுதிகள் :

    ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் ஐந்தாண்டுக்கு குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

    வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத , ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    ஆகம ஆசிரியர் விண்ணப்பதாரர் 01.07.2021 அன்று 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 35 வயது நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 35 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றாலோ அல்லது தகுதியான நபர்கள் இல்லை என்றாலோ 35 வயதை கடந்த விண்ணப்பத்தார்கள் பரிசீலிக்கப் படுவீர்கள்.

    சமையலர் பணியிடத்திற்கான தகுதிகள் :

    • தமிழில் எழுதவும் , படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    • உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    • 01.07.2021 அன்று வயது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.


    எழுத்தர் பணியிடத்திற்கான தகுதிகள் :

    • 10 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்க்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

    • 01.07.2021 அன்று வயது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.


    அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான தகுதிகள்

    • 8 ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்க்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

    • 01.07.2021 அன்று வயது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி