முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் : இந்தியன் வங்கி முக்கிய அறிவிப்பு

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் : இந்தியன் வங்கி முக்கிய அறிவிப்பு

மாதிரிபடம்

மாதிரிபடம்

மாவட்டளவில்/ பல்கலைகாலங்களுக்கு இடையேயான  போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்க வேண்டும். 

  • Last Updated :

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு வீரர் வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட உள்ளனர். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிபணியிடங்கள்: 12

தடகள  விளையாட்டு, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

தடகளம்2 (வீராங்கனைகள் மட்டும்  )
கூடைப்பந்து2 (வீரர்கள் )
கிரிக்கெட்2 (வீரர்கள் )
ஹாக்கி4 (வீரர்கள் )
வாலிபால்2 (வீரர்கள் )
மொத்தம்12

முக்கியமான நாட்கள்: இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. மே மாதம் 14ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.

தகுதிகள் : 

அலுவலர் ( Officer JMG Scale I ) - 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாட்டுக்காக விளையாடி இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள்  ரஞ்சி மற்றும் துலிப் டிராபி போட்டியில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 18 முதல் 26 வயது வரை

எழுத்தர் (Clerk) - 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர்/சீனியர்/ மாநில/ தேசிய அளவிலான போட்டியில்  கலந்து கொண்டிருக்க வேண்டும்

அல்லது

மாவட்டளவில்/ பல்கலைகாலங்களுக்கு இடையேயான  போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு - 18 முதல் 26 வயது வரை

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

தெரிவு செய்யப்படும் முறை:

வயது, விளையாட்டுப் போட்டிகளின் திறன்கள் மற்றும் சாதனைகள், விளையாட்டு பரிசோதனை ஆகியவை மூலம் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அலுவலர் பணிக்கு மட்டும் கூடுதலாக நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.400ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர்,  ரூ.100 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

முழுமையான விவரங்களைப்  பெற

இதையும் வாசிக்க: 

top videos

    பாங் ஆப் இந்தியாவில் 696 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

    First published:

    Tags: Jobs