ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியன் ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

இந்தியன் ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Railway jobs : இந்தியன் ரயில்வேயில் காலியாகவுள்ள குருப்-சி பிரிவு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியன் ரயில்வேயில் உள்ள பணியிடங்களை நிரப்பும் ரயில்வே ஆட்சேர்ப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் இந்த மாதம் இறுதி வரை வரவேற்கப்படும்.

பணியின் விவரங்கள் :

விளையாட்டு கோட்டா :

விளையாட்டு கோட்டாவில் நிலை 5,4,3 மற்றும் 2 பணியிடங்களுக்கு ரூ. 5,200-20,200 சம்பள விகிதத்தில் நிரப்பப்படவுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயதில் இருந்து 25 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவுக்கு 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவு படித்திருக்க வேண்டும். கிராண்ட் பே ரூ.2,800 பிரிவு பணிகளுக்குப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விளையாட்டுத் துறை கோட்டாவில் விண்ணப்பதார்களுக்குத் திறன் தேர்வு மற்றும் விளையாட்டுத் துறையில் படைத்த சாதனை அடிப்படையில் வேலைக்கான தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Also Read : இந்திய ராணுவத்தில் இன்ஜீனியரிங் பட்டதாரிகளுக்கு நிரந்த வேலைக்கு வாய்ப்பு... உடனே விண்ணப்பிக்க

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர் https://ner.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும். SC/ST/Ex-serviceman/PwBDs பிரிவினர் ரூ.250/- தேர்வு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://ner.indianrailways.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.12.2022 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Indian Railways, Jobs, Railway Jobs