இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் காலியாக உள்ள Clerical Assistants பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 10ம் தேதி அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 1ம் தேதி. அதற்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் http://www.indianspices.com/என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் – Spices Board of India (Spices Board)
காலியாக உள்ள வேலையின் பெயர்
Clerical Assistants
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
10/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி
01/07/2022
சம்பள விவரம்
மாதம் ரூ.25000/-
பணியிடம்
Jobs in Chennai, Mumbai – Maharashtra, Kerala, Kochi
கல்வித் தகுதி விவரம்
டிகிரி (Degree ) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்
18 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி
hrdatp.sb-ker@gov.in
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
படி : 1 அதிகாரப்பூர்வ இணையதள பக்கதிற்குச் செல்லவும்.
படி : 2 அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் கீழே இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
படி : 3 பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை ஒரு முறை சரிபார்க்கவும்.
படி : 4 hrdatp.sb-ker@gov.in என்ற மின்அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
படி : 5 விண்ணப்ப படிவத்தை எதிர்காலப்பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.