வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வாய்ப்பு

இச்சலுகையைப் பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியான நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு வாய்ப்பு
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சலுகை
  • News18
  • Last Updated: October 27, 2018, 7:22 PM IST
  • Share this:
2011 முதல் 2016-ஆம் ஆண்டுவரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அதாவது 01-01-2011 முதல் 31-12-2016 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.  1. இச்சலுகையைப் பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியான நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

  2. இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

  3. மூன்று மாதங்களுக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்
  4. 01-01-2011க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


இவ்வாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2011 முதல் 2016-ம் ஆண்டுவரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அக்டோபர் 25-ம் தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அதாவது  ஜனவரி 24-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
First published: October 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading