தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன்11) நடைபெறுகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு, சம உரிமை திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திட்ட இயக்குநர் (ஊரக வாழ்வாதார இயக்கம்), இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மாவட்ட தொழில் மைய அலுவலர், உதவி இயக்குநர், (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (Skill Training) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலமாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான (18 வயதிற்கு மேற்பட்ட) சிறப்பு வேலைவாய்பபு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதன்அடிப்படையில் 11.06.2022 அன்று காலை 9:00 மணிக்கு
வ.உ.சி கல்லூரி வளாகத்தில் வைத்து அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். மாற்றுத்திறனாளிகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அனைத்துவகை (18 வயதிற்கு மேற்பட்ட) மாற்றுத்திறனாளிகளும் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை UDID (தனித்துவம் வாயந்த தேசிய அடையாள அட்டை) மற்றும் கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கவும் (Skill Training) தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே மேற்கண்ட பயிற்சியை மேற்கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : முரளி கணேஷ்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.