ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: 1284 காலிபணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: 1284 காலிபணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

தெற்கு ரயில்வேயில் அப்ரன்டிஸ் பணி

தெற்கு ரயில்வேயில் அப்ரன்டிஸ் பணி

தெற்கு ரயில்வேயில் அப்ரன்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெற்கு ரயில்வேயில் 1284 அப்ரன்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ இருந்தால் போதும். வேலைக்கான விண்ணப்பம், தகுதி, கட்டணம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

  பணிக்கான விவரங்கள்:

  பயிற்சி: Trade apprentice.

  மொத்த காலியிடங்கள் : 1284.

  அப்ரன்டிஸ் பணிக்கான கல்வித் தகுதி:

  10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் fitter/turner/machinist/welder/electronics machanics/painter உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  Fresher பிரிவுக்குக் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  பணிக்கான வயது வரம்பு:

  ஐடிஐ பிரிவுக்கு 15 வயது முதல் 24க்குள்ளும், ஐடிஐ அல்லாத பிரிவுக்கு (Non - IIT) 15 முதல் 22க்குள்ளும் இருக்க வேண்டும்.

  பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகளின் விரிவான விவரம் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பயிற்சி காலம் மற்றும் உதவித் தொகை:

  10 ஆம் வகுப்பு/ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் Freshers welder டிரேடுக்கு 15 மாதங்களும், இதர டிரேடுகளுக்கு 2 வருடங்களும் பயிற்சி வழங்கப்படும். ஐடிஐ படித்தவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.

  உதவித் தொகையாக 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய். 6 ஆயிரம், ஐடிஐ படித்தவர்களுக்கு மாதம் ரூபாய். 7 ஆயிரம் வழங்கப்படும்.

  Also Read : ரயில்வேயில் வேலை...சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் 1343 காலியிடங்கள்....

  விண்ணப்பிக்கும் முறை:

  www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூபாய்.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பெண்களுக்குக் கட்டணம் கிடையாது.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.10.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Apprenticeship, Southern railway