சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு விளையாட்டு கோட்டாவில் சம்பள நிலை 2,3,4,5 பிரிவுகளில் உள்ள 21 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் இதோ...
பணியின் விவரங்கள்:
நிலை 4/5 சம்பள பணிகள்:
விளையாட்டு பிரிவு | பணியிடம் |
கூடைப்பந்து (ஆண்) | 2 |
கூடைப்பந்து (பெண்) | 1 |
கிரிக்கெட் (பெண்) | 1 |
கைப்பந்து (பெண்) | 1 |
மொத்தம் | 5 |
நிலை 2/3 சம்பள பணிகள்:
விளையாட்டு பிரிவு | பணியிடம் |
கூடைப்பந்து (ஆண்) | 2 |
கூடைப்பந்து (பெண்) | 2 |
கிரிக்கெட் (ஆண்) | 2 |
ஹாக்கி (ஆண்) | 3 |
நீச்சல் (ஆண்) | 1 |
கைப்பந்து (ஆண்) | 2 |
கைப்பந்து (பெண்) | 2 |
மொத்தம் | 16 |
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு 18 வயதில் இருந்து 25 வயது வரை உள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
நிலைகள் | தொடக்கச் சம்பளம் |
நிலை - 2 | ரூ.19,900 |
நிலை - 3 | ரூ.21,700 |
நிலை - 4 | ரூ.25,500 |
நிலை - 5 | ரூ.29,200 |
கல்வித்தகுதி:
7வது சிபிசி படி நிலை 2 மற்றும் நிலை 3 சம்பள பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிலை 4 மற்றும் நிலை 5 சம்பள பணிகளுக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் திறன் தேர்வு, விளையாட்டில் படைத்த சாதனைகள் மற்றும் கல்வித்தகுதி போன்றவற்றில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
Also Read : மத்திய அரசில் ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் சமூக ஊடக நிர்வாகி பணி : விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்கும் முறை:
தகுந்த தகுதியுடையவர்கள் https://rrcmas.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். SC/ST/Women/ Ex. Servicemen/Persons with Disabilities பிரிவினருக்கு ரூ.250/- விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு ரூ.500/- செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://iroams.com/rrc_sr_chennai_sports/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Railway Jobs, Sports