ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு: சாரணர் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம்

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு: சாரணர் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம்

காட்சிப்படம்

காட்சிப்படம்

நிலை 1ல் உள்ள பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (அல்லது) ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் (அல்லது)  தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள நிலை 2, நிலை-1  காலிப்பணியிடங்களில் சாரணர் இயக்கம் மற்றும் வழிகாட்டி (SCOUTS & GUIDES QUOTA) இடஒதுக்கீட்டின் கீழ்  விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலியிடங்கள்:  

  தெற்கு ரயில்வே: நிலை 2 பதவியில் இரண்டு காலி இடங்கள்;  நிலை 1ல் பதவியில் 12 இடங்கள் உள்ளன.

  ஐசிஎப் தொழிற்சாலையில், நிலை 1 பதவியில் 2 இடங்களும், நிலை 2ல்  ஒரு இடமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  அடிப்படைத் தகுதிகள்:

  சாரணர்/வழிகாட்டி/ ரோவர்/ ரேஞ்சர் (அல்லது) ஹிமாலயன் வூட் பேட்ஜ் (HWB) என எந்தவொரு பிரிவிலும் ஜனாதிபதி விருது வைத்திருக்க வேண்டும்;

  இத்தேர்விற்கு விளம்பரம் வெளியிட்ட தேதிக்கு முன்னர் 5 ஆண்டுகளுக்கு சாரணர் இயக்கத்தில் உறுப்பிராக உறுப்பினராக  இருத்தல் வேண்டும்;

  தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற குறைந்தது இரண்டு  சாரணர் நிகழ்ச்சியிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்.

  தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலமும் தேசிய, மாநிலம் மற்றும் மாவட்ட  சாரணர் இயக்கத்தில் கலந்து கொண்டு சாரணர் சேவை செய்ததன் அடிப்படையிலும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

  கல்வித் தகுதி:

  நிலை 2ல் உள்ள தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு 12ம்  வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிநுட்பம் சாந்த பதவிக்கு SCVT/ NCVTல் அங்கீகரிக்கப்பட்ட  ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  நிலை 1ல் உள்ள பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (அல்லது) ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் (அல்லது)  தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  வயது வரம்பு: 

  நிலை 2 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2023 அன்று 30-க்கு கீழும், 18 க்கு மேலும் இருக்க வேண்டும்.  நிலை 1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2023 அன்று 33-க்கு கீழும், 18 க்கு மேலும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

  இதையும் வாசிக்க: ஈரோடு சுகாதார துறையில் பல்வேறு காலியிடங்கள் : முழு விவரம் இதோ!

  விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.250 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

  விண்ணப்பம் செய்வது எப்படி? 

  விண்ணப்பங்களை, Southern Railway Recruitment Cell வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறையில் பணியின் பெயர் மற்றும் உரிய சான்றுகளுடன்,  "APPLICATION FOR RECRUITMENT AGAINST SCOUTS & GUIDES QUOTA - LEVEL-'2" (or) "APPLICATION FOR RECRUITMENT AGAINST SCOUTS & GUIDES QUOTA LEVEL-'1

  THE CHAIRMAN, 15. Details of IPO Name of the P Railway Recruitment Cell, Southern Railway,III Floor, No.5, Dr. P.V.Cherian Crescent Road, Egmore,chennai - 600 008  "என்ற முகவரிக்கு  அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் 

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Railway Jobs, Recruitment