ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தெற்கு ரயில்வேயில் 1343 காலியிடங்கள்: தேர்வு கிடையாது... 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

தெற்கு ரயில்வேயில் 1343 காலியிடங்கள்: தேர்வு கிடையாது... 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

புதிதாக வேலைதேடும் இலைஞர்கள் பிரிவில் 110 காலியிடங்களும், முன்னாள் ஐடிஐ இளைஞர்களுக்கு 1233 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வெல்டர், கார்ப்பென்டர்,பெயிண்டர், எலெக்ட்ரிசியன் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

  தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் (நெல்லூர், சித்தூர் மாவட்டங்கள்),  கர்நாடகா(தக்சின கனடா) , கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், ஏனம் மற்றும் புதுச்சேரி) மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் (நிக்கோபார், வட மற்றும் மத்திய அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான்) ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  காலியிடம்: 1343

  புதிதாக வேலைதேடும் இளைஞர்கள் பிரிவில் 110 காலியிடங்களும், முன்னாள் ஐடிஐ இளைஞர்களுக்கு 1233 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  வயதுக்கான தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் 29/09/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

  கல்வித் தகுதி: பிட்டர், பெயின்டர், வெல்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்  புதியவர்கள், 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், மருத்துவ ஆய்வு தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதியவர்கள் 10,+2ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

  முன்னாள் ஐடிஐ மாணவர்கள், 10ம் வகுப்புத் தேர்ச்சியுடன் தொடர்புடைய பாடநெறிகளில் ஐடிஐ சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பக்  கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

  ஊதியம்:  10ம் வகுப்பு கல்வித் தகுதி பணிக்கு மாதம் ரூ.6000 ஊக்கத்தொகையாகவும், 12ம் வகுப்பு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு,  முன்னாள் ஐடிஐ மாணவர்களுக்கும்    மாதம் ரூ.7000 ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும்.

  இதையும் வாசிக்க: கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

  தெரிவு செய்யப்படும் முறை: அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதியில்  பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.

  தொழில் பழகுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு மட்டுமே தெற்கு ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், நிரந்தர வேலைவாய்ப்பு கோர முடியாது. பயிற்சி காலத்திற்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் வெளியேற்றப் படலாம்.

  www.sr.indianrailways.gov.in என்ற இணைய பக்கத்தில் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,

  ENGAGEMENT OF ACT APPRENTICES UNDER APPRENTICES ACT 1961 NOTIFICATION-01/2022

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment, Southern railway