ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரயில்வேயில் வேலை...சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் 1343 காலியிடங்கள்....

ரயில்வேயில் வேலை...சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் 1343 காலியிடங்கள்....

சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் வேலை

சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் வேலை

சென்னை மற்றும் பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் ரயில்வே அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை மற்றும் பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் ரயில்வே அப்ரன்டிஸ் பணிக்காக 1343 இடங்கள் காலியாகவுள்ளது. அதனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, பணிக்கான தகுதி, வயது வரம்பு போன்றவற்றை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  ரயில்வே அப்ரன்டிஸ் பணிக்கான விவரங்கள்:

  பயிற்சி : Trade apprentice.

  மொத்த காலியிடங்கள் : 1343.

  ரயில்வே அப்ரன்டிஸ் பணிக்கான கல்வித் தகுதி:

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • fresher பிரிவுக்குக் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • எம்எல்டி பிரிவிற்குக் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் அறிவியல் பாடத்தில் பிள்ஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  பணிக்காக விண்ணப்பிக்க வயது விவரங்கள்:

  • ஐடிஐ பிரிவிற்கு 15 முதல் 24 வயதிற்குள்ளும், ஐடிஐ அல்லாத பிரிவுக்கு 15 முதல் 22க்குள் இருக்க வேண்டும்.
  • பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

  Also Read : நீங்கள் சட்டம் மற்றும் கால்நடை அறிவியல் படித்தவரா? மத்திய அரசில் உங்களுக்கு வேலை...உடனே விண்ணப்பியுங்கள்...

  விண்ணப்பிக்கும் முறை:

  www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  கட்டணம்: விண்ணப்பத்திற்கு ரூபாய்.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.10.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Chennai, Jobs, Southern railway