தெற்கு ரயில்வேயில் 4,450 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி!

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 924 பேருக்கும், கோயம்புத்தூர் கோட்டத்தில் 2,652 பேருக்கும், திருச்சி கோட்டத்தில் 853 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வேயில் 4,450 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: January 8, 2019, 10:42 PM IST
  • Share this:
தெற்கு ரயில்வேயில் 4,450 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜனவரி 13.

தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள தெற்கு ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதன்படி பெரம்பூர், தாம்பரம், ஆவடி, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய சென்னை கோட்டத்தில் 924 பேருக்கும், கோயம்புத்தூர் கோட்டத்தில் 2,652 பேருக்கும்,  திருச்சி கோட்டத்தில் 853 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், பெயின்டர், பிளம்பர், ரேடியாலஜி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.


கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. முடித்தவர்களும், பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 13. விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.sr.indianrailways.gov.in, https://iroams.com/Apprentice/recruitmentIndex ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.இதற்கும் விண்ணப்பிக்கலாமே!

மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள 370 பணியிடங்கள்: https://tamil.news18.com/news/employment/mahanadi-coalfields-limited-invites-applications-for-370-vacancies-92611.html

 

Also watch

First published: January 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்