தெற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள 4,373 பயிற்சிப் பணியிடங்கள்!

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

தெற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள 4,373 பயிற்சிப் பணியிடங்கள்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: December 19, 2018, 10:26 PM IST
  • Share this:
தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் 3 இடங்களில் 4,373 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸில் 924 இடங்களும், பொன்மலை சென்ட்ரல் ஒர்க் ஷாப்பில் 797 இடங்களும், போத்தனூர் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கூடத்தில் (S&T workshop) 2652 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

உட்பிரிவுகள்: ஒவ்வொரு இடத்திலும் உள்ள பயிற்சிப் பணியிடங்களில் ஃபிட்டர், வெல்டர், கார்ப்பென்டர், பெயின்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட உட்பிரிவுகள் உள்ளன. அந்தந்த பிரிவுக்கு உரிய இடங்கள் குறித்து வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.


வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் (10-ம் வகுப்பு) அல்லது ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், மகளிர் கட்டணம் செலுத்த தேவையில்லை.கடைசி தேதி: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13-1-2019. மேலும் விவரங்களுக்கு  www.rrcmas.in, https://iroams.com/Apprentice/recruitmentIndex ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

First published: December 19, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்