நியூஸ்18 செய்தி எதிரொலி: அப்ரண்டீஸ் பயிற்சிகளுக்கு தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க ரயில்வே அறிவிப்பு

நியூஸ்18 செய்தி எதிரொலி: அப்ரண்டீஸ் பயிற்சிகளுக்கு தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க ரயில்வே அறிவிப்பு
இந்திய ரயில்வே
  • Share this:
திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட தொழிற் பழகுநர் பயிற்சியிடங்களுக்கு தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், தொழிற் பயிற்றுநருக்கான 1765 பணியிடங்களில் 1500க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு பிரத்யேக செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், திருச்சி பொன்மலை பணிமனையில் உள்ள 308 தொழிற்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பில் தென்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


LINK: https://drive.google.com/file/d/1z_p1MME5QvU5EHDKTXWdBt6O7f1IucOe/view?usp=sharing
First published: December 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்