Home /News /employment /

சௌத் இந்தியன் பேங்கில் காலியிடங்கள்.. தேர்வு இல்லை - முழு விவரம்

சௌத் இந்தியன் பேங்கில் காலியிடங்கள்.. தேர்வு இல்லை - முழு விவரம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

South Indian Bank Recruitment 2022 : மும்பையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

    சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலியிட அறிவிப்பினை வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரம் அடங்கிய சுய விவர படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலையின் பெயர் :

    வேலைவாய்ப்பு அறிவித்துள்ள வங்கியின் பெயர்:  சௌத் இந்தியன் வங்கி( The South Indian Bank Limited )

    வேலையின் பெயர் : Relationship Manager - Financial Institution Group, Dealer - Derivatives, Relationship Manager – CSGL & DCM

    காலிப்பணிகளின் எண்ணிக்கை :  பல்வேறு பணியிடங்கள்

    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி : 01.08.2022

    விண்ணப்பிக்க இறுதி தேதி  : 10.08.2022

    தேர்வு செய்யப்படும் முறை: Shortlisting and Interview

    வயது தகுதி

    Relationship Manager - Financial Institution Group - 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    Dealer - Derivatives - 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.Relationship Manager – CSGL & DCM - 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கல்வித்தகுதி :

    Relationship Manager - Financial Institution Group - விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree அல்லது CA படித்தவராக இருக்க வேண்டும். 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Dealer - Derivatives - விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும். 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Relationship Manager – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

    வேலைக்கான அனுபவம் விவரம்:

    Relationship Manager Financial Institution Group :  4 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்

    Dealer - Derivatives: 4 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

    Relationship Manager – CSGL & DCM : 2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

    சம்பள விவரம்:

    Scale I / II / III (IBA Package) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை :

    வங்கியின் இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணம்:

    விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

    பணியிடம் :

    மும்பையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

     பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி?

    படி : 1 விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வங்கியின் இணையதள முகவரியில் https://www.southindianbank.com/ சென்று விண்ணப்பிக்க வேண்டும் .

    படி : 2 01.08.2022ம் தேதியில் இருந்து 10.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    படி : 3 விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப படிவத்தை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    படி : 4 விண்ணப்பத் தாரர்கள் புகைப்படம் , சுய விவரப் படிவம் (Curriculum Vitae (CV)) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    படி : 5 விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்பத்தை சமர்ப்பித்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துகொள்ளவும் .

    அறிவிப்பினை பெற

    https://drive.google.com/file/d/1RInlNoJBdm2Pw1ZrW7PE20GyFvmjKiso/view

    https://www.southindianbank.com/

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

    புகைப்படத்தை பதிவேற்றம் (uploading)செய்வதற்கான நிபந்தனைகள் : 

    • JPEG format (.jpg)

    • Width - 378 pixel, Height - 437 pixel

    • File Size – should not exceed 200 KB


    கையொப்பத்தை (Signature) பதிவேற்றம் செய்வதற்கான நிபந்தனைகள் : 

    • The applicant should sign on a white paper with black ink pen and upload the same

    • Resolution: 110 pixels (height) x 140 pixels (width)

    • Ensure that the size of the scanned image is not more than 50kb.


    விண்ணப்ப படிவத்தை பதிவேற்றம் செய்வதற்கான நிபந்தனைகள் :

    PDF முறையில் விண்ணப்ப படிவத்தை பதிவேற்றம் செய்து 1 MBக்கு மேல் இல்லாமல் பார்த்துகொள்ளளவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Bank Vacancy, Job Vacancy

    அடுத்த செய்தி