தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை - விண்ணப்பித்து விட்டீர்களா?

news18
Updated: August 6, 2019, 1:28 PM IST
தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை - விண்ணப்பித்து விட்டீர்களா?
இந்திய ரயில்வே
news18
Updated: August 6, 2019, 1:28 PM IST
தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Sports Persons (Groups - C)

காலியிடங்கள் : 21

சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு : 01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : 10 வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதாவது பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய மாவட்ட, பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், விளையாட்டுத் தகுதி, விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 எஸ்.சி, எஸ்.டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.250 இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central railway என்ற பெயரில் Secunderabad-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கோடிட்ட Bank Draft, IPO ஆக எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Senior Personnel Officer ( Engg.& Rectt), Room No. 412, Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Rail Nilayam, Secunderabad - 500025 (Telengana)

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.scr.indianrailways.gov.in/cris/Uploads/files/1564490633289-sports_quotq.pdf என்ற லிங்கைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.08.2019

வீடியோ பார்க்க: காஷ்மீர் இணைப்பின் கதை!

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...