ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு ரூ.60,000 சம்பளத்தில் வேலை... மத்திய அரசின் செய்தித்தாள் பதிவு செய்யும் பிரிவில் காலி பணியிடங்கள்

பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு ரூ.60,000 சம்பளத்தில் வேலை... மத்திய அரசின் செய்தித்தாள் பதிவு செய்யும் பிரிவில் காலி பணியிடங்கள்

செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம்

செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம்

Central Govt job alert : மத்திய அரசின் செய்தித்தாள் பதிவு செய்யும் பிரிவான செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் கீழ் செயல்படும் செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் வெளிவரும் செய்தித்தாள் மற்றும் இதழ்களின் பதிப்பகத்தைப் பதிவு செய்யும் அமைப்பாகச் செயல்படுகிறது. பணியின் விவரங்களை இதில் பார்க்கலாம்.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்

  ProjectManagercum Sr.SoftwareEngineer

  1ரூ. 60,000/-
  SoftwareEngineer2ரூ. 40,000/-

  கல்வித்தகுதி:

  B.E./ B.Tech/ MCA (Computer Science or IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மென்பொருள் பொறியாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.

  Also Read : அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்: தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.becil.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:  https://becilregistration.in/

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 27.11.2022.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs