மத்திய மின்துறை நிறுவனத்தில் 230 பயிற்சிப் பணியிடங்கள்!

விண்ணப்பதாரர்கள் 28-12-2018 நிலவரப்படி 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

news18
Updated: December 17, 2018, 4:02 PM IST
மத்திய மின்துறை நிறுவனத்தில் 230 பயிற்சிப் பணியிடங்கள்!
230 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி
news18
Updated: December 17, 2018, 4:02 PM IST
மத்திய மின்துறையின் கீழ் இயங்கும் துணை நிறுவனங்களில் ஒன்று எஸ்.ஜே.வி.என். லிமிடெட். இந்த நிறுவனத்தில் 230 பேருக்கு அப்பரன்டிஸ் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் பட்டதாரிகள் பிரிவில் 100 இடங்களும், டிப்ளமா பிரிவில் 50 இடங்களும், ஐ.டி.ஐ. பிரிவில் 80 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 28-12-2018 நிலவரப்படி 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவர்கள் அல்லது பிளஸ் 2 அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், டிப்ளமா இன்ஜினியரிங் படித்தவர்கள் டிப்ளமா டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், பி.இ., பி.டெக். படித்தவர்கள் பட்டதாரி பயிற்சிப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 28. மேலும் விவரங்களுக்கு http://sjvn.nic.in/olrp/Vacancy.aspx என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Also watch

Loading...

First published: December 17, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...