ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

களரி மற்றும் சிலம்பம் தெரிந்தவரா? தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர் வேலை..!

களரி மற்றும் சிலம்பம் தெரிந்தவரா? தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர் வேலை..!

சிலம்பம்

சிலம்பம்

TN job alert : சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) பயிற்சியாளருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) களரி மற்றும் சிலம்பம் பயிற்சியாளருக்கான தற்காலிக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  களரி மற்றும் சிலம்பம் பயிற்சியாளருக்கான பணியின் விவரங்கள்:

  களரி பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்களரி பயத்துப் பயிற்சியாளர்.
  பணியிடம்1
  வயதுஅதிகபட்சம் 40 வயது
  சம்பளம்ரூ.20,000/-
  கல்வித்தகுதிபட்டப்படிப்பு மற்றும் களரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  எதிர்பார்க்கும் தகுதிBPEd., /களரியில் சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ / போட்டிகளில் வெற்றி சான்றிதழ்.

  சிலம்பம் பணிக்கான விவரங்கள்:

  பணியின் பெயர்சிலம்பம் பயிற்சியாளர்.
  பணியிடம்1
  வயதுஅதிகபட்சம் 40 வயது
  சம்பளம்ரூ.20,000/-
  கல்வித்தகுதிபட்டப்படிப்பு மற்றும் சிலம்பம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  எதிர்பார்க்கும் தகுதிBPEd., /சிலம்பத்தில் சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ / போட்டிகளில் வெற்றி சான்றிதழ்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களைத் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதனுடன் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை அறிவிப்பில் குறிப்பிட்டது போல் முறையாகக் கட்டி ரசீதுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://tnpesu.org/upload/

  விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை:

  SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 250/-

  இதர விண்ணப்பதாரர்கள்: ரூ. 500/-

  "The Registrar, Tamil Nadu Physical Education and Sports University" என்ற பெயரின் Demand Draft வங்கியில் செலுத்த வேண்டும்.

  Also Read : இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

  பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், 600127.

  விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் : 16.11.2022 மாலை 5.00 வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Job vacancies, Jobs, Sports