ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

1 கோடி மாணவர்களுக்குப் பயன்: டிஜிட்டல் திறன் உருவாக்கம் திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு

1 கோடி மாணவர்களுக்குப் பயன்: டிஜிட்டல் திறன் உருவாக்கம் திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு

திறன் உருவாக்கத்தோடு (Skilling),  மறுதிறன் (Reskilling) அளித்தல், திறனை மேம்படுத்துதல் (Upskilling) ஆகியவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்தும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  Digital Skilling Program:  21ம் நூற்றாண்டு வழங்கும் தொழிநுட்ப வாய்ப்புகளை பயன்படுத்த ஏதுவாக டிஜிட்டல் திறன் உருவாக்கம் (Digital Skilling Programe) என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

  நாட்டில் முதன் முறையாக, மத்திய கல்வி அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், திறன் இந்தியா (தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி), ஏஐசிடிஇ உள்ளிட்ட பல்வேறு முனைகள் ஒன்றிணைந்து இத்தகையதொரு திட்டத்தை  தொடங்கியுள்ளது.

  முன்னதாக, இந்த திட்டம் குறித்து பேசிய மத்தியக் கல்வி அமைச்சர், " பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது முக்கியமானதாகும். எதிர்கால தொழிலாளர்களை தயார்படுத்துவதற்கான வாய்ப்பை மத்திய அரசு  உருவாக்கும். கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்கள் என பலருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  திறன் உருவாக்கத்தோடு (Skilling),  மறுதிறன் (Reskilling) அளித்தல், திறனை மேம்படுத்துதல் (Upskilling) ஆகியவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்தும்.

  அப்ரண்டிஸ்ஷிப், உள்ளுறைப் பயிற்சி,  வேலைவாய்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.  

  நாட்டின் பொருள் உற்பத்திற்கு பயன்படக் கூடிய அறிவையும், திறன்களையும் வழங்க கூடிய கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. அதன்படி, கல்விமுறையின் செயற்திறனை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, நாட்டில் உள்ள மாணவர்களுக்கு நன்கு உருவாக்கப்பட்ட கல்வி தொழில்நுட்ப தீர்வுகள், பாடப்பிரிவுகளை வழங்க, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி 3.0 என்ற தளத்தை, மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர ப்ரதான் தொடங்கி வைத்தார். 

  Published by:Salanraj R
  First published:

  Tags: Students