ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியாளர்களை தேர்வு செய்வது 50% வரை குறையும் - மாணவர்கள் அதிர்ச்சி!

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியாளர்களை தேர்வு செய்வது 50% வரை குறையும் - மாணவர்கள் அதிர்ச்சி!

காட்சி படம்

காட்சி படம்

2022 நடப்பு நிதி ஆண்டில் மிக அதிக அளவிலான ஆரம்ப நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிட்டத்தட்ட 6,00,000க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட்டதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வேலை கிடப்பதே திண்டாட்டமாக இருந்து வரும் நிலையில், இளைஞர்களின் முக்கிய தேர்வாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையும் இனி குறைந்த அளவில் பணியாளர்களை நியமனம் செய்ய போவதாக அறிவித்துள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா பெருந்தொற்றின் போது பல பணியிடங்கள் முன்னரே நிரப்பப்பட்டுவிட்டன. அளவுக்கு அதிகமாக பணியிடங்கள் நிரப்பப்பட்டதாலும், தற்போது உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கு பொருளாதார மந்த சூழ்நிலையாலும் வரும் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் கல்லூரி வளாகங்களின் மூலம் பணியாளர்களை தேர்வு செய்வதென்பது பதியாக குறையலாம் என தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அடுத்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் புதியதாக பணியில் சேரும் பணியாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5௦% வரை குறையும் என தெரியவந்துள்ளது. ஏனெனில் நடப்பு நிதி ஆண்டில் கல்லூரி வளாகங்கள் மூலமாக அதிக அளவு பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப நிலை பணியிடங்கள் நடப்பு நிதி ஆண்டில் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. அதிலும் முக்கியமாக இந்தியாவில் முதல் எட்டு இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே 3.00.000 பணியாளர்களை ஆரம்ப நிலை பணியிடங்களில் பணியமர்த்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More : வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை : விண்ணப்பிக்க சேலம் ஆட்சியர் அழைப்பு!

இதை பற்றி பேசிய எக்ஸ்-ஃபெனோ வின் துணை நிறுவனர் கமல் கரந்த், “இந்த வருடம் பொறியியல் கல்லூரிகளில் வேலைக்காக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விகிதம் மிக அதிகமாக குறையும்” என தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணங்கள் என்ன?

2022 நடப்பு நிதி ஆண்டில் மிக அதிக அளவிலான ஆரம்ப நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தின் போது மிக அதிக அளவில் வளர்ச்சியடைந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பமும் ஒன்று. பணியாளர்களின் தேவை அதிகரிக்க (பல்க்-ஹயரிங்) முறையில் பல நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்து ஏற்கனவே பணியமர்த்தி விட்டனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.
இவர்களின் தலைமையகம் இங்கே இருந்தாலும் வாடிக்கையாளர்கள் பலரும் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளை சேர்ந்தவராகவே உள்ளனர். எனவே அங்கு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இங்கு புதியதாக பணியாளர்களை அமர்த்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலை நியமன கடிதங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளன. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அவர்களை முறைப்படி பணியமர்த்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை இப்படி காலதாமதம் ஏற்படுத்திய கல்லூரிகளில் அந்த பணி நியமன கடிதங்களை ரத்து செய்து விட்டதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் கிடைத்த அறிக்கை படி கடந்தாண்டில் மட்டும் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிக அளவில் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: College student, Employment, IT JOBS, Job