வாட்ஸ்ஆப்பில் Hi மெசேஜ் அனுப்பினால் சொந்த ஊரிலேயே வேலை - புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பு!

வாட்ஸ் ஆப்

இதுகுறித்து பேசிய TIFAC -யின் செயல் இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா, கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்களை போக்குவதற்காக இந்த போர்டல் (portal) உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வாட்ஸ்ஆப்பில் Hi என மெசேஜ் அனுப்புவதன் மூலம் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் திறமைகளுக்கு ஏற்ப சொந்த ஊரிலேயே வேலையை தேடிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையைடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா கட்டுபாடுகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. இதனால், நாடு முழுவதும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உண்ண உணவு இல்லாமல், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர். பேருந்து, ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததால், மூட்டை முடிச்சுகளுடன் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக சென்றனர். 

  தமிழ்நாட்டில் இருந்தும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பினர். குடிக்க தண்ணி இல்லாமல், உணவு இல்லாமல் செல்லும் வழியில் பலர் உயிரிழந்தது, மக்களின் மனதை பதைபதைக்க வைத்தது. இந்நிலையில், தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால், சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீண்டு தாங்கள் வேலை செய்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். 

  பெரும்பாலானோர், குடும்ப சூழலையொட்டி சொந்த பகுதிகளிலேயே கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர். பலர் வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் வேதனையை போக்கும் விதமாக தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் புதிய முறை ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 7208635370 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் Hi என மெசேஜ் அனுப்பினால், உங்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய தகவல் தொலைபேசிக்கு அனுப்பப்படும். 

  இதன் மூலம் தொழிலாளர் ஒருவர் தங்களின் திறமைக்கு ஏற்ப சொந்த ஊரிலேயே வேலையை தேடிக்கொள்ளலாம். தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் TIFAC, SAKSHAM என்ற போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பற்றிய விவரம் இணைக்கப்பட்டுள்ளது. 7208635370 என்ற எண்ணுக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பும்போது, அவரின் திறமை, அனுபவம் குறித்த தகவல்கள் கேட்கப்படும். 

  Also read... இந்தியாவில் அடுத்த மாதத்தில் அறிமுகமாகிறது 'Redmi Note 10'.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

  பின்னர், அவர் கொடுக்கும் பதிலின் அடிப்படையில் அவர் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள் தொழிலாளரின் செல்போனின் வாட்ஸ் ஆப்புக்கு வரும். இதனைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கான வேலையை தேர்தெடுத்துக்கொள்ளலாம். வாட்ஸ் ஆப் இல்லாதவர்கள் 022-67380800 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான வேலை குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். 

  இதுகுறித்து பேசிய TIFAC -யின் செயல் இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா, கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்களை போக்குவதற்காக இந்த போர்டல் (portal) உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார். குறிப்பாக, விவசாய தொழிலாளர்கள், பிளம்பரஸ் மற்றும் மின் தொழிலாளர்களுக்கு இந்த போர்டல் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: