ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவரா? - ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு!

பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி பெற்றவரா? - ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு!

ரயில்வே வேலை

ரயில்வே வேலை

சென்னையிலுள்ள இரயில் பெட்டி தொழிற்சாலைகளில் (ICF) Scouts & Guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெற்கு ரயில்வே மற்றும் சென்னையிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் (ICF) Scouts & Guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வந்துள்ளது. காலியாகவுள்ள இடங்களை நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி, தேவை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

  தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஃஎப் பணிக்கான விவரங்கள்:

  பயிற்சி பெயர்Scouts & Guides Quota Recruitment Level 1 & Level 2.
  காலியிடங்கள்ஐசிஃப் சென்னை - 3, தெற்கு ரயில்வே - 14
  சம்பளம்ரயில்வே விதிமுறைப்படி வழங்கப்படும்.
  வயது18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், எஸ்டி,எஸ்சி பிரிவினருக்கு தலா 5 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
  கல்வித்தகுதி10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  சாரண சாரணியர் தகுதி:

  மேற்கண்ட கல்வித்தகுதியுடன் சாரண சாரணியர் அமைப்பில் குறைந்தது 5 வருடங்கள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில்/மாநில அளவில் நடைபெற்ற இரண்டு சாரண சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சாரண சாரணியர் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

  எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம்:

  விண்ணப்பக் கட்டணம்:

  Gerenal / OBC பிரிவினர்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.

  SC/ST/PWD பிரிவினர்கள், பெண்கள், திருநங்கைகள். சிறுபான்மையினர்களுக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.

  விண்ணப்பக் கட்டணத்தை DD அல்லது IPO ஆகச் செலுத்த வேண்டும்.

  கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி:

  தலைவர், ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல், சென்னை.

  விண்ணப்பிக்கும் முறை:

  www.rrcmas.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு அறிவியல் மற்றும் விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் சுய அட்டஸ்ட் நகல்களை இணைத்து 08.11.2022 தேதிக்கு முன் தபாலில் அனுப்பவும்.

  Also Read : மாதம் ரூ.69,810 வரை சம்பளத்தில் மத்திய அரசு வங்கியில் வேலை - விண்ணப்பிக்க நவ. 4-ம் தேதியே கடைசி நாள்!

  அனுப்ப வேண்டிய முகவர்:

  தலைவர், ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல், தெற்கு ரயில்வே, எழும்பூர், சென்னை - 600 008.

  The Chairman, Railway Recruitment Cell, Southern Railway, Egmore, Chennai - 600 008.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 08.11.2022 மாலை 5 மணி வரை.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, ICF, Railway Jobs, Southern railway