தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரசு , நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகும்.
எனவே இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன்கருதி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் ஐந்து மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .
இதையும் படிக்க: TNPSC குரூப் 2, 2ஏ பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம்!
முக்கிய பாடங்களான தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , தாவரவியல் , விலங்கியல் , வரலாறு , வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய 11 பாடங்களுக்கு மட்டுமே மாதம் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பி கொள்ள வேண்டும். .முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட உடன் இவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Teacher