டிஎன்பிஎஸ்சி (TNPSC) நடத்தும் குரூப்- 4 பணியிடங்களுக்கான தேர்வு அட்டவனை இம்மாதம் வெளியாக உள்ளது என நெல்லையில் ஆணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குரூப் 2, 2a தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தற்போது அதற்காக தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள் விடைத்தாள் வைக்கும் கருவூல அறைகளை ஆய்வு செய்தார் . தொடர்ந்து ஆணையத்தின் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஓ.எம்.ஆர் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் தவறுகளை முழுவதும் களைய TNPSC பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
Also Read: கால அவகாசம் நீட்டிப்பு.. TNPSC Group 2 தேர்வுக்கு தயாராவோர் அவசியம் படிக்க..
டிஎன்பிஎஸ்சி தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலையே பிரித்து எடுக்கப்படுவதால் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கான விடைத்தாள் கொண்டுவரும் வாகனங்களில் முறைகேடு நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அச்சமின்றி தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குருப் 4 தேர்வுகள் முன்பே திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத மத்தியில் அதற்கான அட்டவணை வெளியாகும், குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் (Syllabus) தயார் செய்யும் பணி ஓரிரு நாட்களில் நிறைவுறும். பிற அரசு மற்றும் பல்கலை கழக தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இம்மாத மத்தியில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
விடைத்தாள் யாருடையது என்பதை கணினி மூலம் மட்டுமே கண்டறியப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விடைத்தாள் திருத்தத்தில் இருந்த தில்லுமுல்லுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த பாடத்திட்டத்தை படித்தால் தேர்வு எழுத முடியும் என்ற விபரத்தையும் வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பி.எஸ்.சி தேர்வாணையம் மீது தேர்வர்களுக்கு நம்பிக்கை எழுந்துள்ளது.
காலிப்பணியிடம் தற்போது 5 ஆயிரம் என கணக்கிட பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை தேர்வு தேதி அறிவித்து கலந்தாய்வு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது
ஓ.டி.ஆர்-ஆதார் அட்டை இணைப்பு கால அவகாசம் நிறைவு பெற்றுவிட்டது. அந்த கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை” என்றார். இதற்கிடையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா பெயரில் வெளியாகியுள்ள ஆணையில் ஓடி.ஆர் ஆதார் இணைப்பு கால அவகாசம் அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் குழப்பமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
செய்தியாளர்: சிவமணி (நெல்லை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Group 2, Group 2 exam, Group 4, Group Exams, TNPSC