SBI வங்கியில் 326 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தகுதிகள் & கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள்...

SBI SO Recruitment 2020:

SBI வங்கியில் 326 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - தகுதிகள் & கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள்...
கோப்புப் படம்
  • Share this:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யில் 326 சீனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 241 பணியிடங்களும், சீனியர் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 85 பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் sbi.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். நேற்று முதல் விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நிலையில், ஜுலை 13-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.


விண்ணப்பதாரர்கள், இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட விபரங்களை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தை கருத்தில் கொண்டு நேர்முகத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படவில்லை.


படிக்கசிக்கிமில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வைரலாக பரவும் வீடியோ

படிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்








பொதுப்பிரிவினர், பொருளாதரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ₹ 750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம்

மேலதிக விபரங்களுக்கு sbi.co.in இந்த தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

 
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading