எஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் (எஸ்சிஓ) பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் பணிகள் கடந்த 5ஆம் தேதியே தொடங்கிவிட்ட போதிலும், பிப்ரவரி 25ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் ஆகும்.
இது மட்டுமல்லாமல் அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், சீனியர் எக்ஸிகியூடிவ் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) மற்றும் சீனியர் எக்ஸிகியூடிவ் (பப்ளிக் ரிலேஷன்) ஆகியவற்றில் மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சார்ட்லிஸ்ட் செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்துவதன் மூலமாக இந்தப் பணி நியமனங்கள் நடஒபெற உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது, கல்வி உள்ளிட்ட தகுதி விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
எஸ்பிஐ எஸ்சிஓ பணியிடங்களுக்கான தகுதிகள்:
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் முழு நேரக் கல்வியில் எம்பிஏ (மார்கெட்டிங்) / பிஜிடிஎம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை, அதே துறையில் கொண்டிருக்க வேண்டும். டிகிரி தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : 12வது படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை!
வயது வரம்பு: அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பப்ளிக் ரிலேஷன் ஆகிய பிரிவுகளில் சீனியர் எக்ஸிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30 ஆகும்.
தேர்வு நடைமுறை
விண்ணப்பங்களை சார்ட்லிஸ்ட் செய்த பிறகு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்
எஸ்பிஐ பணி நியமனம்: எப்படி விண்ணப்பம் செய்வது
* எஸ்பிஐ வங்கியின்
http://sbi.co.in/careers இணையதளத்தில் கேரீயர் பிரிவை பார்க்கவும்
* ஹோம் பேஜ் பக்கத்தில் சென்று, லேட்டஸ்ட் ஓபனிங்க்ஸ் என்பதை கிளிக் செய்து, ஒப்பந்த அடிப்படையில் எஸ்சிஓ பணியில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும்
* நியூ ரெஜிஸ்டிரேசன் என்பதை கிளிக் செய்து உங்கள் பெயரை பதிவு செய்யவும். பூர்த்தி செய்த பதிவு விவரங்களை சேவ் செய்து, மேற்கொண்டு தொடரவும்
* விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்யவும்.
* விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
* உங்கள் பார்வைக்காக, சமர்ப்பித்த விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, உங்கள் டிவைஸில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படியுங்கள் : மத்திய அரசு வேலை.. 5000 காலிப்பணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / பிடபிள்யூடி ஆகிய பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.