முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / SBI வங்கியில் காலி பணியிடங்கள் - உடனே அப்ளை செய்யுங்கள்!

SBI வங்கியில் காலி பணியிடங்கள் - உடனே அப்ளை செய்யுங்கள்!

எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ

SBI Recuruitment | எஸ்.பி.ஐ வங்கியின் இந்த பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க, ஜெனரல், ஓபிசி மற்றும் EWS ஆகியோர்களுக்கு இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

வங்கியில் பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை உள்ளவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு அற்புத வாய்ப்பு இதோ. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் பணிபுரிவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி இன்றுடன் (மே17) முடிவடைய உள்ளதால் விரைந்து செயல்படுங்கள். எஸ்.பி.ஐ-இன் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.sbi.co.in தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வழக்கமான மற்றும் ஒப்பந்தப்படி எஸ்.பி.ஐ ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் (SCO) பதவிகளில் 36 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை பற்றிய விரிவான தகவல்களை இனி தெரிந்து கொள்வோம்.

காலி பணியிடங்கள் :

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரிய இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி, சாதாரண பணி இடங்கள் 7 உள்ளது. அதே போன்று கான்ட்ராக்ட் பணி இடங்கள் 29 உள்ளது. இந்த காலி இடங்களை பொறுத்து தங்களுக்கு எது ஏற்றதோ அவற்றிற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்.பி.ஐ வங்கியின் இந்த பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க, ஜெனரல், ஓபிசி மற்றும் EWS ஆகியோர்களுக்கு இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு எந்த வித விண்ணப்ப கட்டணமும் கிடையாது. இந்த பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க https://bank.sbi/web/careers என்கிற தளத்திற்கு செல்ல வேண்டும்.

Also Read : இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

அடுத்து, இதற்கான விண்ணப்ப கட்டணத்தை இன்டர்நெட் பேங்கிங்/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை முதலில் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவரது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்யாத வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. எனவே தரப்பட்டுள்ள எல்லாவற்றையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

இந்த ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மே 17 அன்று முடிவடைய உள்ளது. இதற்கான அனுமதி அட்டை ஜூன் 16 முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இந்த பணி இடங்களுக்கான ஆன்லைன் தேர்வு ஜூன் 25 அன்று தொடங்கும் என தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இது குறித்த எல்லா தகவல்களையும் சரியாக அறிந்து கொண்டு விண்ணப்பிப்பது நல்லது. அதே போன்று இந்த ஆன்லைன் அப்ளிகேஷன் முடிவடைய கூடிய தேதியையும் நினைவில் கொண்டு விரைவாக விண்ணப்பியுங்கள்.

First published:

Tags: Employment, Job, SBI