ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

SBI வங்கியில் 600க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க 1 நாள் மட்டுமே உள்ளது

SBI வங்கியில் 600க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க 1 நாள் மட்டுமே உள்ளது

எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ

SBI Recruitment 2022 | பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய அரசு வங்கி என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும்.

ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கி நிர்வகிக்கிறது. ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

இந்த வங்கியில் காலியாக உள்ள 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களைத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 7ம் தேதி கடைசி நாள். அதற்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறைபாரத் ஸ்டேட் வங்கி  (State Bank of India)
காலியாக உள்ள வேலையின் பெயர்
Channel Manager Facilitator – Anytime Channels (CMF-AC)
Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC)
Support Officer- Anytime Channels (SO-AC)

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி18/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி07/06/2022
கல்வித் தகுதி விவரம்ஏ.டி.எம் செயல்பாடுகளில் பணி அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஓய்வுபெற்ற ஊழியர் ஸ்மார்ட் மொபைல் போன் மற்றும் PC/Mobile App/Laptop அல்லது தேவைக்கேற்ப கண்காணிப்பதற்கான திறன்/தகுதி/தரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 18.05.2022ம் தேதியின் படி குறைந்த பட்சம் 60 வயது முதல் அதிக பட்சம் 63 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்
Channel Manager Facilitator – Anytime Channels (CMF-AC)503 Posts
Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC)103 Posts
Support Officer- Anytime Channels (SO-AC)08 Posts

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பத் தாரர்கள் shortlisting & interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள் இருக்கும். நேர்முகத் தேர்வின் தகுதி மதிப்பெண்கள் வங்கியால் தீர்மானிக்கப்படும். இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையின் பெயர்சம்பள விவரம்
Channel Manager Facilitator –  சேனல் மேலாளர் உதவியாளர்மாதம் ரூ.36,000.
சேனல் மேலாளர் மேற்பார்வையாளர்ரூ 41,000
உதவி அதிகாரிரூ 41,000

SBI ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?

படி 1 : முதலில், விண்ணப்பதாரர்கள் எஸ்.பி.ஐ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

படி 2 : முகப்புப் பக்கத்தில் உள்ள "CAREER"  கிளிக் செய்யவும்.

பின்னர், 'Engagement of Retired Bank Staff on Contract Basis - Anytime Channels' என்பதன் கீழ் 'Apply Online' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3 : விண்ணப்பத்தை பதிவு செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். படிவத்தைப் பதிவிறக்கி, எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

படி 4 : ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட (save ) விண்ணப்பப் படிவத்தை பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் (passward ) பயன்படுத்தி மீண்டும் திறக்கலாம்-தேவைப்பட்டால் விவரங்களைத் திருத்தலாம். சேமிக்கப்பட்ட தகவல்களைத் திருத்தும் (edit) இந்த வசதி மூன்று முறை மட்டுமே கிடைக்கும். விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டவுடன், விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

First published:

Tags: Job Vacancy, SBI