SBI வங்கியில் காலியாக உள்ள 8 பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். பாரத் ஸ்டேட் பேங் Case Manager - AML/CFT பணிக்கு 8 காலியிடங்கள் உள்ளதாக கடந்த 01/06/2022ம் தேதி அறிவிப்பினை வெளியிட்டது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | SBI |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Case Manager - AML/CFT |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 01/06/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/06/2022 |
பணியிடம் | விண்ணப்பிக்கும் நபர்கள் ஜெய்ப்பூரில் பணியில் அமர்த்தப்படுவர். |
சம்பள விவரம் | ரூ.37,000/- மாதச் சம்பளம் |
வயது தகுதி | 60 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
மொத்த காலிப்பணியிட விவரம் | 08 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.08 (General 04, Other Backward Caste 02, Scheduled Caste 01, Scheduled Tribe 01) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | Shortlisting , interview |
SBI ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?
படி 1 : விண்ணப்பதாரர்கள் S.B.Iஇணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம் தங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
படி 2 : விண்ணப்பதாரர்கள் முதலில் அவர்களின் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் தனது புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றும் வரை ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படாது.
படி 3 : விண்ணப்பதாரர்கள் ‘விண்ணப்பப் படிவத்தை’ கவனமாக நிரப்பி, அதை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.
படி 4 : ஆன்லைனில் பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் கணினியில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களின் பிரிண்ட் அவுட்டை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-09/apply
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy, SBI, SBI Bank