• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • SBI Recruitment 2021: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

SBI Recruitment 2021: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

SBI

SBI

எஸ்பிஐ பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Share this:
    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள சிறப்பு கேடர் அதிகாரி (Special Cadre Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்  - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
    பணியின் பெயர்  - சிறப்பு கேடர் அதிகாரி 
    பணியிடங்கள்  - 16
    விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.06.2021
    விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

    31.12.2020 தேதியின்படி, இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். அதாவது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Tech./ B.E. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எஸ்பிஐ பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது (SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை). இந்த பணியிடத்திற்கு 15.06.2021 முதல் விண்ணப்பிக்கலாம்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.06.2021 ஆகும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 28.06.2021 ஆகும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் 15.06.2021 முதல் 28.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: