எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரங்களை கீழே பார்க்கலாம்...
பணி: Special Cadre Officer
காலியிடங்கள் : 92
தகுதி : ஒவ்வொரு பணி வாய்ப்புக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
CA, CFA,MBA, PGDM, புள்ளியியல் துறையில் எம்.எஸ்.சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், பேங்கிங், நிதியியல், ஐடிஐ, பொருளாதாரம் போன்ற பிரிவிகளில் முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: ரூ.31,705 - 51,490
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி இ-மெயில் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.750 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை :www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.