ஏதாவது ஒரு டிகிரி முடிச்சிருந்தா போதும்... எஸ்பிஐ பேங்கில் வேலை இருக்கு!

எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு டிகிரி முடிச்சிருந்தா போதும்... எஸ்பிஐ பேங்கில் வேலை இருக்கு!
எஸ்.பி.ஐ
  • News18 Tamil
  • Last Updated: November 21, 2020, 11:27 AM IST
  • Share this:
இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ட்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 470 காலியிடங்கள் இருக்கின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

பணி : அப்ரெண்டீஸ்


காலியிடங்கள் - 8500

தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் - 470

உதவித் தொகை : முதல் வருடத்தில் மாதம் ரூ.15,000. இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு ரூ.19,000 வழங்கப்படும்கல்வித்தகுதி : ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் (யுஜி டிகிரி) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு, மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் - எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தவிர, மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://nsdcindia.org/appernticeship அல்லது https://appernticeshipindia.org அல்லது https://bfsissc.com அல்லது  https:// bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in ஆகிய ஏதாவது ஒரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விரிவான விவரங்கள் பற்றியும் இந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.12.2020
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading