நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான கிளார்க் மற்றும் பி.ஓ பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பும் விளம்பரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு விளம்பரங்களானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஐ பேங்க் கிளார்க் பணியிடங்களான முதற்கட்டத் தேர்வு வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து இது தொடர்பான எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை; ஆனால் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
நினைவூட்டும் வண்ணம், எஸ்பிஐ பி.ஓ (SBI PO) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் இடையே வெளியிடப்படுவது வழக்கம். ஆக குறிப்பிட்ட வேலைக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான எஸ்பிஐ.கோ.இன் ஐ (sbi.co.in) அவ்வப்போது பார்வையிடுவது நல்லது, அறிவிப்பு வெளியானதும் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும். ஒருவேளை, மேற்கூறிய இரண்டு வேலைகளுக்கும் சேர்த்து எஸ்பி.ஐ ஒரே அறிவிப்பை கூட வெளியிடலாம். இது பற்றிய தெளிவு வரும் வாரங்களில் கிடைக்கும்.
எஸ்பிஐ பிஓ, கிளார்க் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு:
கல்வி: எஸ்பிஐ பிஓ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், வேலையில் சேரும் முன் இறுதியாண்டு முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் - அரசு விதிமுறைகளின்படி - அதிகபட்ச வயது வரம்பில் தளர்வை பெறுவார்கள். கிளார்க் பதவிக்கு, குறைந்தபட்ச வயது 20 ஆகவும் இருக்கலாம்.
எஸ்பிஐ பிஓ, கிளார்க் பணிகளுக்கான ஊதிய விவரங்கள்:
கிளார்க் பதவிக்கான ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.19,900 ஆகும் (பட்டதாரிகளுக்கு ரூ.17,900 பிளஸ் டூ இன்கிரிமென்ட்).
எஸ்பிஐ பிஓ பதவிக்கான ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.41,960 இலிருந்து தொடங்குகிறது (பேஸிக் பே). ப்ரோபேஷனரி ஆபிஸர் / மேனேஜ்மென்ட் ட்ரெய்னீயின் ஊதியம் ரூ. 36,000-14,90/7-46,430-1,740/2-49,910-1,990/7-63,840 ஆகும்.
2022 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஐ பிஓ காலி பணியிடங்களுக்கான செலெக்ஷன் ப்ராசஸ் ஆனது ப்ரீலிமினேரி தேர்வு (preliminary examination), அதன்பின் முதன்மைத் தேர்வு (main examination) மற்றும் நேர்காணலை உள்ளடக்கியது. முதல் கட்டமாக ப்ரிலிமினரி தேர்வு நடக்கும், பிறகு இரண்டாம் கட்ட தேர்வு நடக்கும், இதில் மெயின் எக்ஸாமினேஷன் மற்றும் லோக்கல் லேங்குவேஜ் டெஸ்ட் (local language test) ஆகியவைகள் அடங்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி மேற்குறிப்பிட்ட பிஓ, கிளார்க் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு விளம்பரங்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான எஸ்பிஐ.கோ.இன் (sbi.co.in) வழியாகவே வெளிவரும்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.