Home /News /employment /

எஸ்பிஐ வங்கியில் 5,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

எஸ்பிஐ வங்கியில் 5,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ

27.09.2022  ஆம் தேதிக்குள் sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாட்டின் மிகவும் பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி இளநிலை  அசோசியேட் (Junior Associate) பணிக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    காலியிடங்கள்: 5008



    முக்கியமான நாட்கள்: 

    அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 07.09.2022

    இணையதளத்தில் விண்ணப்பங்கல் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 27.09.2022

    விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்:  27.09.2022 அன்றிரவுக்குள் செலுத்த வேண்டும்.

    வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2002 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

    எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

    கல்வித் தகுதி:  பல்கலைக்கழகதால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த (BA, B.Com, BSc, B.Tech, etc)அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்   

    விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்   விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மட்டும்  ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.



    தெரிவு செய்யப்படும் முறை: இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலைத்தேர்வு(Prelims), முதன்மைத் தேர்வு(Mains) என  2 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வானது நவம்பர் மாதத்திலும், முதன்மைத் தேர்வானது டிசம்பர்/பிப்ரவரி 2023 அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க: சீருடைப் பணியாளர் தேர்வுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி: தமிழ்நாடு அரசு

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    27.09.2022  ஆம் தேதிக்குள் sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) (Apply Online from 07.09.2022 TO 27.09.2022)(Advertisement No: CRPD/CR/2022-23/15)
    Published by:Salanraj R
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி