ஸ்டேட் பேங்கில் அதிகாரியாக வேண்டுமா?: 48 பணியிடங்கள் அறிவிப்பு

news18
Updated: September 12, 2018, 6:49 PM IST
ஸ்டேட் பேங்கில் அதிகாரியாக வேண்டுமா?: 48 பணியிடங்கள் அறிவிப்பு
கோப்புப் படம்
news18
Updated: September 12, 2018, 6:49 PM IST
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) உதவி மேலாளர், தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட 48 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த 48 பணியிடங்களில், 27 பணியிடங்கள் Deputy Manager (Security) என்ற பிரிவையும், 21 பணியிடங்கள் Fire Officer என்ற பிரிவையும் குறிக்கும்.

மேலும், விவரங்களுக்கு www.sbi.co.in/careers என்ற இணையதளத்தை பார்க்கவும். அதில் Recruitment of Specialist Cadre Officers (Regular/Contractual) என்ற பகுதியை கிளிக் செய்யவும்.

உங்களைப் பற்றிய விவரங்களை அதில் பதிவு செய்யவும். பின்னர், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 24.

தேர்வுமுறை: தகுதி வாய்ந்த நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...