பொதுத்துறை நிறுவனமான பாரத் ஸ்டேட் வங்கி ஓய்வு பெற்ற முன்னாள் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
60 வயது முதல் 63 வரையிலானவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 641
பணி விபரம்:
பதவி |
தகுதி |
காலியிடங்கள் |
Channel Manager Facilitator -
Anytime Channels (CMF-AC) |
1. Award staff of SBI/e-ABS
2. Officers Scale I,II,III and IV
of SBI/ e-ABS /other PSBs |
503 |
Channel Manager SupervisorAnytime Channels (CMS-AC) |
Officers Scale II, III and IV of
SBI/ e-ABS /other PSBs |
130 |
Support Officer- Anytime
Channels (SO-AC) |
Officers Scale II, III and IV of
SBI/ e-ABS |
8 |
எல்லா வகையிலும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அங்கு, விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றுகளை நேர்காணல் தேர்வில் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த அறிவுத்தல்களை எஸ்பிஐ இணையதளத்தில் பார்க்கவும்.
எஸ்பிஐ வலைதளத்தில் நேர்காணலுக்காக அனுமதிச்சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும்.
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் : 18.05.2022
இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 07.06.2022. அன்றிரவுக்குள்ளாகவே விண்ணப்பிக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள், https://bank.sbi/careers https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பதாரரின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவர், நிரந்தர முகவரி, சாதி சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.
இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும். 65 வயது கால அளவு கழிவுறும் வரை பணி அமர்த்தப்படுவார்கள்.
ENGAGEMENT OF RETIRED BANK STAFF ON CONTRACT BASIS
ஆன்லைனில் விண்ணப்பங்கள் சம்ர்பிக்க இந்த
இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.