SBI | எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

SBI | எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

எஸ்.பி.ஐ

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளர்க் பணிகளில் ஜூனியர் அசோசியேட்டாக நியமனமாக தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி 2021ம் ஆண்டிற்கான கிளர்க் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை ஏப்ரல் 27 (இன்று) முதல் தொடங்குகிறது. ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ தளமான sbi.co.in இல் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 17 என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு மொத்தம் 5,237 காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளர்க் பணிகளில் ஜூனியர் அசோசியேட்டாக நியமனமாக தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு முறை மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக விண்ணப்பிப்பவர்கள் ஒரு மாநிலத்தில் மட்டுமே காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அந்த மாநில / யூடி / சிறப்புப் பகுதியின் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த மொழியை வாசித்தல், எழுதுதல், பேசுவது மற்றும் புரிந்துகொள்வது அவசியம். இந்த பணிகளுக்கான தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்கள் பின்வருமாறு,

விண்ணப்பிக்கும் முறை ஆரம்பமாகும் தேதி - ஏப்ரல் 27, 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி - மே 17, 2021
ப்ரீ எக்ஸாம் பயிற்சிக்கான கால் லெட்டர் - மே 26, 2021
பிரிலிம்ஸ் தேர்வு - ஜூன் 2021
மெயின் தேர்வு - ஜூலை 31, 2021

விண்ணப்பிக்கும் தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவொரு துறையிலும் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சமமான தகுதி ஒழுங்கு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சமமான படிப்பு தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் (ஐடிடி) சான்றிதழ்கள் கொண்ட விண்ணப்பதாரர்கள் ஐடிடி தேர்ச்சி பெறும் தேதி 2021 ஆகஸ்ட் 16 அல்லது அதற்கு முன்னதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Also read... ஆதார் மோசடிகளை தடுக்க உங்கள் 12 இலக்க UIDAI எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்? எப்படி?

ஆட்சேர்ப்பு அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது “குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழியின் அறிவுக்கான தேர்வுகள் மெயின் தேர்வின் ஒரு பகுதியாக நடத்தப்படும். இது ஆன்லைன் பிரிலிம் தேர்வில் தகுதி பெற்ற பிறகு நடத்தப்படும். இந்த தேர்வில் தகுதி பெறத் தவறும் நபர்களுக்கு நியமனம் வழங்கப்படாது. குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழியைப் படித்ததாக 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைத் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மொழி சோதனை தேவையில்லை. ஜூனியர் அசோசியேட்ஸ் ஆட்சேர்ப்பு செய்ய சர்க்கிள் ட்ரான்ஸ்பர் / இன்டர் ஸ்டேட் ட்ரான்ஸ்பர் செய்ய வசதி வழங்கப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: