பாரத ஸ்டேட் வங்கியில் 7870 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 400 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 26 கடைசி நாளாகும்.
பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பணி: ஜூனியர் அசோசியேட் (Junior Associate-Customer Support and Sales)
எப்படி விண்ணப்பிப்பது?
1. https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்திற்கு செல்லவும்
2. latest Notifications ஐ கிளிக் செய்து Recruitment of Junior Associate என்பதை தேர்வு செய்யவும்.
3. அதில் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை நன்கு படித்து பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
முக்கிய தேதிகள்:
1. ஜனவரி 3, 2020 - ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
2. ஜனவரி 26, 2020 - விண்ணப்பிக்க கடைசி நாள்
3. பிப்ரவரி/மார்ச் 2020 - தேர்வு
விண்ணப்ப கட்டணம்:
எஸ்.சி./எஸ்.டி - கட்டணம் இல்லை
ஓபிசி/பொது - ₹750
வயது வரம்பு:
குறைந்தது 20 வயது
அதிகப்பட்சம் 28 வயது
கல்வித்தகுதி
தேர்வர்கள் கட்டாயம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.