ஸ்டேட் பாங்க் ஃப் இந்தியாவின் Clerical Cadre என்ற பணியிடத்திற்கான சென்னை உட்பட நாடு முழுவதும் நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது.
2022 செப்டம்பர் மாதம் 7 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Clerical Cadre-Junior Associates (Customer Support & Sales) பதவிக்கு நாடு முழுவதும் 5,008 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றிருந்தன.
அதே மாதம் 27 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இமாச்சல் மாநிலத்தைத் தவிர இதர மாநிலங்களுக்கு நவம்பர் 12 ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான அட்மிட் கார்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டன.
இப்பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழி தேர்வு நடத்தப்படும். தற்போது 5,008 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை sbi.co.in அல்லது ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணைத்தளத்தில் காணலாம்.
தேர்வு முடிவுகளைக் காண : https://bank.sbi/web/careers/crpd/clk-phase-1-2022
முடிவுகளைக் காண வழிமுறை:
தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுத் தேர்வு முடிவுகளைக் காணலாம். முதல் நிலை தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மை தேர்வுக்கான அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Exam, Banking jobs, SBI Bank