பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வட்டார அளவில் உள்ள அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி தேர்வுகளில் இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வாகும். எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: 1422
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு வட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 30.09.2022 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 36,000/ வரை பெறலாம்.
இதையும் வாசிக்க: எவ்வித தேர்வும் இல்லை... ரேசன் கடைகளில் 344 காலியிடங்கள்- எப்படி விண்ணப்பிப்பது?
தெரிவு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Objective Test), ஆங்கிலத் திறனை சோதிக்கும் பேப்பர்/பேனா முறை விரிவான எழுத்துத் தேர்வு (Descriptive test)/ நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று நிலையில் தெரிவு முறை இருக்கும்.
அந்தந்த வட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் மொழிகளை பேச எழுத தெரிந்திருக்க வேண்டும். இறுதி பட்டியலில் இடம் பெற்ற மொழி அறிவு சோதனை நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் உறுதி செய்யப்படும்.
மேலும், 30.09.2022 அன்றைய தேதியில், ஏதேனும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் (Scheduled Commercial Banks) 2 ஆண்டுகள் பணி செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? https://bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.SC/ST/PwBD விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy, Recruitment, SBI Bank