Banking Jobs: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி இணை மேலாளர், மூத்த நிர்வாகி, நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | நியமன வகை |
Deputy Manager (Database Administrator) | 6 | 35 | MMGS-II |
Deputy Manager (Infrastructure Engineer) | 2 | 35 | MMGS-II |
Deputy Manager (Java Developer) | 5 | 35 | MMGS-II |
Deputy Manager (WAS Administrator) | 3 | 35 | MMGS-II |
Senior Executive (Frontend Angular Developer) | 3 | 35 | Contractual |
Senior Executive (PL & SQL Developer) | 3 | 35 | Contractual |
Senior Executive (Java Developer) | 10 | 35 | Contractual |
Senior Executive (Technical Support) | 1 | 35 | Contractual |
Executive (Technical Support) | 2 | 32 | Contractual |
Senior Special Executive (Technology Architect) | 1 | 35 | Contractual |
MMGS-II பணி வகைகளுக்கு ரூ.48,170 -69,810 வரை அடிப்படை சம்பளம் வழங்கப்படும். Contractual பணியாளர்களுக்கு ரூ.27 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
தெரிவு முறை: MMGS-II பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Contractual பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு https://bank.sbi/ என்ற இணையத்தளத்தில் அல்லது https://ibpsonline.ibps.in/ என்ற இணையத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2023
RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN STATE BANK OF INDIA ON REGULAR / CONTRACT BASIS
இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட்நியூஸ்; கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Recruitment, State Bank of India