ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எஸ்பிஐ வங்கியில் 1,673 ப்ரோபேஷனரி ஆபீசர் பணியிடங்கள்: 12-ம் தேதியே கடைசி !

எஸ்பிஐ வங்கியில் 1,673 ப்ரோபேஷனரி ஆபீசர் பணியிடங்கள்: 12-ம் தேதியே கடைசி !

SBI வேலைவாய்ப்பு

SBI வேலைவாய்ப்பு

SBI PO Recruitment 2022 Deadline: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.s 41,960/ வரை பெறலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT: மிகவும் எதிர்பார்க்கப்படும் வங்கி தேர்வுகளில் ஒன்றான எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாள் (12 ஆம் தேதி) முடிவடைகிறது.

  எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

  எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் காலியிடங்கள்: 1,673

  இதில் 648 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 464 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 160 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 270 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 131 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  இதையும் வாசிக்க: தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு: சாரணர் இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம்

  வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.04.2022 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

  ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்.

  எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் தெரிவு முறை:

  இப்பதவிக்கான தேர்வு முறையானது 3 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத்தேர்வு(Written), முதன்மைத் தேர்வு(Main Examination),  திறனறிவுத் தேர்வு (psychometric test) மற்றும் நேர்காணல் (Interview).

  முதல் நிலைத் தேர்வானது டிசம்பர் 17, 18, 19,20 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வானது 2023 பிப்ரவரி மாதத்திலும்  அன்றும், திறனறிவு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு 2023  பிப்ரவரி/மார்ச் மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  வாய்ப்பு: இந்த ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிக்கு ஏற்கனவே 4 முறை முதன்மைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், பொதுப் பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஓபிசி வகுப்பினர், ஓபிசி வகுப்பினரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முயற்சிகளுக்கான அதிகபட்ச வாய்ப்பு 7ஆக உள்ளது. 18.04.2010 அன்று நடைபெற்ற தேர்வில் இருந்து இந்த எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படுவதாகவும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் அதிகபட்ச வயதுவரம்புக்கு உட்பட்டு தேர்வுக்கு முயற்சிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  RECRUITMENT OF PROBATIONARY OFFICERS

  ADVERTISEMENT NO: CRPD/ PO/2022-23/18

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job, SBI