ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India), அதாவது எஸ்பிஐ வங்கி, ஒப்பந்த அடிப்படையில் 641 சேனல் மேனேஜர் பதவிகளுக்கு எஸ்பிஐயின் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது. குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்ப செயல்முறை நடந்து வருகிறது மற்றும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 7 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ வேலைவாய்ப்பு 2022: அறிவிக்கப்பட்டுள்ள காலியிட விவரங்கள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது இந்த வேலைவாய்ப்பின் கீழ் மொத்தம் 641 காலியிடங்களை நிரப்ப உள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 641 காலி இடங்களில் 503 காலியிடங்கள் சேனல் மேனேஜர் ஃபெசிலிடேட்டர் - ஏனிடைம் சேனல்களுக்கும் (Channel Manager Facilitator -Anytime Channels; CMF-AC), 130 காலியிடங்கள் சேனல் மேனேஜர் சூப்பர்வைசர் சேனல்களுக்கும் (Channel Manager Supervisor Anytime Channels; CMS-AC) மற்றும் 8 காலியிடங்கள் சப்போர்ட் ஆபிஸர் - எனிடைம் சேனல்களுக்குமானது (Support Officer- Anytime Channels; SO-AC).
எஸ்பிஐ வேலைவாய்ப்பு 2022: வயது வரம்பு
அறிவிக்கப்பட்டுள்ள சேனல் மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களின் வயது 60 முதல் 63க்குள் இருக்க வேண்டும்.
Read More : சென்னை அமேசான் நிறுவனத்தில் தர நிர்ணயாளர் பணி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
எஸ்பிஐ வேலைவாய்ப்பு 2022: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in க்குள் நுழையவும்
- பிறகு ஹோம் பேஜில் உள்ள கேரியர் (Career) என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.
- இப்போது எஸ்பிஐ அறிவித்துள்ள குறிப்பிட்ட வேலைவாய்ப்பு தொடர்பண விளம்பரத்தைத் தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் விண்ணப்பிக்கும் இணைப்பைக் (Apply Link) கிளிக் செய்யவும்
- பிறகு விண்ணப்பத்தை ரிஜிஸ்டர் செய்து ப்ரொசீட் (Register and proceed) செய்யவும்
- விண்ணப்பிப்பதற்கான தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவும்
- எதிர்கால தேவைக்காக விண்ணப்பத்தின் நகல் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள 641 சேனல் மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உதவும் நேரடி இணைப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும். (Website Link: https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-07/apply)
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்பது ஒரு பொதுத்துறை வங்கி ஆகும். மகாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கி உலகின் 43வது பெரிய வங்கியாகும். மேலும் 2020 ஆம் ஆண்டின் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் 'பார்ச்சூன் குளோபல் 500' பட்டியலில் எஸ்பிஐ வங்கிக்கு 221-வது இடத்தையும் பிடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job, Job vacancies, Job Vacancy, SBI, SBI Bank