டெல்லி ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் அமைப்புடன் இணைந்து 'நாளைய பிரச்சினையைத் தீர்ப்பது' என்ற புதிய சவால் திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்கியுள்ளது.
கல்வி, சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளில் காணப்படும் சவால்களுக்கு கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கருத்துகளுக்கு நிதி உதவியுடன், தொழில் தொடங்குவதற்கான சூழழும் உருவாக்கித் தரப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்: தினசரி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் யாரும் இதற்கு விண்ணப்பிலாம்.
வயது வரம்பு: 16 முதல் 22 வயது வரை
தனிநபர் அல்லது 3 பேர் கொண்ட குழுக்கள் இதற்கு விண்ணப்பில்லாம்.
முக்கியமான நாள்: இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. ஜுலை 31ம் தேதிக்குள் கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
என்ன சவால்: கல்வி, சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளில் காணப்படும் சவால்களுக்கு நல்ல கருத்துக்களை சமர்ப்பித்தால் மட்டும் போதுமானது.
சவால் போட்டி எப்படி செயல்படுகிறது:
நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்ட விண்ணப்பபங்களில், முதற்கட்டமாக 50 குழுக்கள் அடையாளம் காணப்படும்.
இரண்டாவது கட்டத்தில், தேந்தெடுக்கப்பட்ட 50 குழுக்களுக்கு டெல்லி ஐஐடி நிறுவனத்தில் இயங்கும் புத்தாக்க மையத்தில் (FITT) மூன்று நாள் பயிற்சிகள் அளிக்கப்படும். இதில், செயல்படுத்தக் கூடிய தீர்வுகள் தொடர்பான காணொளியை தேர்வர்கள் உருவாக்க வேண்டும். இதனடிப்படையில், 10 குழுக்கள் அடையாளம் காணப்படும்.
மூன்றாவது கட்டத்தில், யோசனைகளை சந்தைப்படுத்துவதற்கு தேவையான கருத்துருவின் ஆதாரத்தை வலுப்படுத்துதல் (Proof of Concept), இணைப்புகளை வலுப்படுத்துதல், முதலீடுகள் பற்றி அறிமுகப்படுத்துதல் தொடர்பான முதன்மை பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின், 10 குழுக்களும் தங்களது யோசனைகளை தேர்வுக்குழுவின் முன் சமர்ப்பிக்க வேண்டும். இதனடிப்படையில், மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்படும்.
இந்த மூன்று குழுக்களுக்கு டெல்லி ஐஐடி வணிகமயமாக்கலுக்குத் தேவைப்படும் ஆதரவுகளை வழங்கும். தொழில் தொடங்குவதற்கான சூழல் உருவாகித் தரப்படும். இதற்காக, ரூபாய். 1 கோடி வரை மானியமாக வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Samsung