ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஐடிஐ முடித்தவர்கள் பங்கு பெறலாம்!

10ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஐடிஐ முடித்தவர்கள் பங்கு பெறலாம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Salem Apprenticeship Mela: ஐ.டி.ஐ / டிப்ளமோ / டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் மாவட்டத்தில் வருகின்ற 10ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்  நடைபெறவுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- "சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, 10.10.2022 அன்று காலை 09.00 மணியளவில் சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

  இம்முகாமில் ஐ.டி.ஐ / டிப்ளமோ / டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprentice Certificate) மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.

  இதையும் வாசிக்க8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்.. ஊராட்சி ஓன்றியத்தில் வேலைவாய்ப்பு

  எனவே, இதுநாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத, ஐ.டி.ஐ / டிப்ளமோ / டிகிரி முடித்த மாணவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மைச் சான்றுகள் மற்றும் விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழகுநர் முகாமில் கய கலந்துகொண்டு பயன்பெறாம் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Apprentice job, Apprenticeship, Entrepreneurship